பரிந்துரைக்கப்பட்ட மாற்றுப்பொருட்களை நீங்களே வீட்டில் சொந்தமாக தயார்செய்து, அவற்றைப் பயன்படுத்த முடியும்.

அபய சூத்திரம்: மஞ்சள் பொடியை சிறிது தண்ணீரில் குழைத்து, அதில் தோய்த்த ஒரு வெள்ளை பருத்தி நூலை நீங்கள் பயன்படுத்த முடியும்

வஸ்திரம்: பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு கருப்புத் துணியான இந்த வஸ்திரம், செயல்முறையை நீங்கள் சிறப்பாக உள்வாங்கிட துணைநிற்கிறது. துணி கிடைக்கவில்லையென்றால், இந்த படியை தவிர்த்திடுங்கள்.

பூமி: தோட்டம் அல்லது நாற்றுப் பண்ணைகள் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத இடத்திலிருந்து அதே அளவு மண்ணை எடுத்துக்கொள்ளுங்கள்.

விபூதி: இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தியானலிங்கத்தின் சக்திசூழலில் வைக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்ட சாம்பல். உள்ளூர் ஈஷா ஷாப்பியில் இது கிடைக்கிறதா எனப் பாருங்கள். கிடைக்கவில்லை எனில் இந்த படியைத் தவிர்த்திடுங்கள்.

தியானலிங்க புகைப்படம்: தியானலிங்கம் என்பது, ஒருவரின் உச்சபட்ச நல்வாழ்வுக்காக சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சக்திவாய்ந்த தனித்துவமான ஒரு சக்தி வடிவமாகும். பஞ்சபூத கிரியாவின் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் அம்சமான இந்த படம், தியானலிங்கத்தின் இருப்பை நீங்கள் சிறப்பாக உணர்ந்திட உதவுகிறது.

Envisioned by Sadhguru ,Project Samskriti offer programs in Indian classical arts including music, dance and kalaripayattu - a martial art form. These intricate arts have been employed for thousand of years for spiritual processes.